பட்டு புடவையை வீட்டிலேயே துவைத்து பராமரிப்பது எப்படி ??



விதவிதமான  சேலைகள் பல இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் அது பட்டு புடவைதான்.

பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து கொண்ட சேலைதான் பட்டு சேலை. புதியதாய் பட்டு புடவை வாங்கினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி.

உலகளவில் பல நாட்டு பெண்களும் அணிய விருப்பப்படும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும், அணியும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன. பட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஆலயத்திற்கு அணிந்து செல்லும் போது அங்கிருக்கும் இறை சக்தியை நம் உள்வாங்கி தருகிறதாம். அதன் காரணமாய் ஆலயம் செல்லும்போது அவசியம் பட்டு சேலை கட்டி வருகின்றனர். அதுபோல் பட்டு சேலைக்கு என தோஷமும் கிடையாது.

பார்போற்றும் பட்டு சேலையை பாவையர் உடுத்தி செல்லும் போது உள்ளமெல்லாம் உற்சாகமாய் துள்ளும்.

அத்தகைய விலை உயர்ந்த பட்டு புடவையை பராமரிப்பது என்பது அனைவருக்கும் மிகப்பெரிய சவாலாக அமைகிறது. Dry Clean  செய்ய கொடுத்தால் நமக்கு செலவு அதிகமாகும். அதிக விலை கொடுத்து வாங்கிய பட்டுப்புடவையை பராமரிப்பதற்கு ஆகும் செலவோ அப்பப்பா !  ஒரு புடவைக்கு 250/- முதல் 1000/- ரூபாய் வரை ஆகிறது. DryClean கடைக்காரரிடம் கேட்டால் "இதுல ஜரிகை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு, அதனால தாங்க இந்த rate" என்பார். அவ்வளவு தான் நமக்கு தலையே சுற்றிவிடும். என்னடா இது! "சுண்டைக்காய் கால் பணம் ; சுமைக்கூலி முக்கால் பணமா" என்று நம் மனம் புலம்பும்.   அது மட்டுமின்றி புடவை கிடைக்க குறைந்த பட்சம் 10 நாட்களாவது ஆகும்.

கவலையை விடுங்க. நம் வீட்டில் இருந்தபடியே குறைந்த செலவில், பட்டு புடவையை நிறைவாக பராமரிப்பது எப்படி என்பது பற்றி இந்த post ல் பார்க்கலாம் வாங்க...

உங்கள் பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தி குறைந்த செலவில் மிக விரைவாக புடவையை பராமரிக்க இதோ உங்களுக்காக ஒரு அற்புதமான ஐடியா...

கடைகளில் எங்கும் கிடைக்கும் பூந்தி கொட்டை எனப்படும் Soap Nut அல்லது Reetha வை பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தி பட்டுத் துணிகளைத் துவைத்தால், சாயம் போகாமல் பட்டு ஜரிகை பளிச்சென்று இருக்கும்.

துவைக்கும் விதம் :

1. பூந்தி கொட்டையினை இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைத்து பின் காலையில் உபயோகித்தால் அதிக நுரை கிடைக்கும். இந்த ஊற வைத்த பூந்தி கொட்டையை  mixie - ல் அரைத்து அந்த ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து கலக்கவும்.

How to maintain Silk sarees in our house itself? - Poondhikottai - Soap Nut



2. ஒரு mug அரைத்த பூந்திகொட்டை நுரையுடன் 2 mug தண்ணீர் சேர்த்து புடவையை அதில் மூழ்க வைக்கவும்.


How to maintain Silk sarees in our house itself? - Foam Water of Poondhikottai


3. பட்டுப் புடவையை எப்போதும் ஊற வைக்க கூடாது. மிக வேகமாக தேய்க்கவோ, brush செய்யவோ கூடாது. 

4.  சாதாரணமாக பட்டு புடவையின் அடிப்பகுதி தரையில் படுவதால் அங்கு அதிகமாக அழுக்கு இருக்கும். எனவே அந்த பகுதியினை மட்டும் brush கொண்டு மெதுவாக தேய்க்கவும். அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்கக்கூடாது.  ஜரிகை போய் விடும்.

5. புடவையை நன்றாக துவைத்த பின் அதை soap நுரை போகும் வரை தண்ணீரில் நன்றாக அலசவும்.  அதை கொஞ்சம் விரித்து விரித்து அலச வேண்டும்.

How to maintain Silk sarees in our house itself? - Rinse the Saree in water


6. புடவையை லேசாக பிழிந்து நிலையாக ஓர் இடத்தில் தொங்கவிட வேண்டும். சாயம் போகும் புடவைகளை தனியாக துவைத்து அலசவேண்டும்.


How to maintain Silk sarees in our house itself? - Drain the Saree

7. பிறகு புடவைக்கு கஞ்சி போடவேண்டும். கடைகளில் கிடைக்கும் ready made கஞ்சி மாவு (starching powder) கூட உபயோகிக்கலாம். ஆனால் நாமே கஞ்சி தயாரித்து, இதனை ஒருமுறை பயன்படுத்தினால் பிறகு இருமுறை துவைத்த பின்னும் புடவை stiff ஆக  இருக்கும்.

How to maintain Silk sarees in our house itself? - Javvarisi / Sago



கஞ்சி போடும் விதம்:

ஒரு  புடவைக்கு 50 கிராம் வீதம் ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு நைசாக அரைத்து அதனை அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல், கட்டி வராமல் கரண்டியால் கலக்கவும்.

நன்கு கெட்டியாக கஞ்சி பதம் வந்த பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

How to maintain Silk sarees in our house itself? - Javvarisi Kanji

ஜவ்வரிசி திப்பி திப்பியாக இருந்தால் புடவையில் வெள்ளையாக ஒட்டிக்கொள்ளும். எனவே அதனை கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி வடிகட்டியபின் பயன்படுத்தலாம்.

How to maintain Silk sarees in our house itself? - Filtering Javvarisi Kanji


ஒரு புடவைக்கு இரண்டு mug தண்ணீரும் இரண்டு mug கஞ்சியும் ஓர் bucket ல் ஊற்றவும், வாசனைக்காக Comfort-ம் ஊற்றலாம்.

How to maintain Silk sarees in our house itself? - Adding Comfort & Soak

இதில் புடவையை நன்றாக மூழ்கி எடுக்கவும். பின் லேசாக, அழுத்தம் தராமல்
புடவையை பிழியவும்.

சாயம் போகும் புடவையாக இருந்தால் முதலில் பயன்படுத்திய கஞ்சி தண்ணீரை கொட்டி விட்டு, புதியதில் மட்டுமே மூழ்கி எடுத்தல் வேண்டும்.


8. கஞ்சி போட்ட புடவையை இப்போது கொடியில் காய வைக்க வேண்டும். Blouse-ஐ மடித்து காயப்போடாமல் நேராக காயப்போடுதல் வேண்டும். Iron செய்வதற்கும் இது எளிதாக இருக்கும்.

புடவையை கூட எப்போதும் உலர்த்துவது போல மடித்து காயவைக்காமல் நீள வாக்கில் கொடியில் உலர்த்துவது அவசியம்.

இவ்வாறு உலர்த்துவதால் புடவையில் அதிக சுருக்கம் வராமல், மடிப்புகள் ஒட்டாமல் இருக்கும்.

How to maintain Silk sarees in our house itself? - Drying the Saree in lengthwise


9. காய்ந்த புடவையையும் blouse ஐயும் பிறகு Iron செய்ய வேண்டும்.


Iron செய்யும் விதம்:

Steam iron Box-ல் செய்தால் கூட blouse இலும் புடவையிலும் சிறிது தண்ணீர் நனைத்த துணியால் தேய்த்து விட்டே iron செய்ய வேண்டும்.

புடவையை ஒரு மடியாக மடித்து அதன் மேல் newspaper போட்டு சரியான சூட்டில் உள்ளதா என்று சரி பார்த்த பின் newspaper ஐ எடுத்து விட்டு நேராக புடவையிலேயே iron செய்யலாம்.

அதிகம் சுருக்கம் உள்ள இடத்தில் தண்ணீர் நனைத்த துணியால் தேய்த்து விட்டு பிறகு iron செய்யவும்.

How to maintain Silk sarees in our house itself? - ironing the saree
இது போல் துவைத்து ஐயர்ன் செய்தால் புடவை  அதிக நாட்கள் நன்றாக இருக்கும்.  புடவை எளிதில்  நைந்து போகாது.


பட்டு புடவையை எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்:


1. பட்டு புடவையை hanger இல் தொங்கவிடக்கூடாது. ஏனெனில் hanger இல் தொங்கும் பகுதி மட்டும் தடித்து போய் விடும். அதனால் புடவை நூல் நூலாக வர வாய்ப்புகள் அதிகம்.

How to maintain Silk sarees in our house itself? - Do's and dont's

2. அதேபோல் புடவையை மடித்து மடித்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கவும் கூடாது. புடவை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கும் போது அது உரசி புடவையின் பளபளப்பு இழந்து விடும்.

How to maintain Silk sarees in our house itself? - Do's and dont's

3. மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது புடவையை எடுத்து பிரட்டி மடித்து வைக்கவும்.

4. புடவையை பழைய காட்டன் வேஷ்டியிலோ அல்லது வேறு ஏதும்  உள்ள வெள்ளை துணியிலோ வைக்க வேண்டும்.

How to maintain Silk sarees in our house itself? -  Arranging sarees

Sandwich போல் முதலில் வெள்ளை துணி அதன் மேல் புடவை பிறகு அதன் மேல் வெள்ளை துணி என்று போட்டோவில் உள்ளபடி மடித்து வைக்க வேண்டும்.

How to maintain Silk sarees in our house itself? -  sandwiching sarees

இவ்வாறு உங்கள் பட்டு புடவையை சலவை செய்து , பராமரித்து பயன் பெறுங்கள். 


"யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்..."

Comments

Popular posts from this blog

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த எளிய வழி...

Chemical இல்லாமல் வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே clean செய்வது எப்படி ?

Trick to memorize 9th Table Easily...