DIY Organizer for Women's accessories using Cardboard



ஒவ்வொரு முறை நாம் வெளியூர்களுக்கு போகும் போதும், கடைகளுக்கு shopping செய்ய போகும் போதும் ஏதாவது Bangles  , Hairclips, Chain, Necklace போன்ற பெண் குழந்தைகளுக்கான accessories புது டிசைனில் இருந்தால் உடனே வாங்கி விடுவோம். நம் வீட்டு ராஜகுமாரிகள் 👸 தினமும் அதை டிரஸ்க்கு  matching காக போட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக வலம் வருவார்கள்.  புதிதாக ஒரு தோடு போட்டுக்கொண்டால் கூட அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

ஆனால் குழந்தைகள் அதை மறுபடியும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. வீடு முழுவதும் இரைந்து கிடக்கும்.  அம்மாக்களுக்கு தான் வேலை. பிறகு என்றாவது ஒரு நாள் வெளியில் செல்ல நேரும் போது "😠அம்மா! என் ஒரு தோடு இங்க இருக்கு. இனொன்னு எங்க? எனக்கு தேடிக்கொடு"😕என்று வீட்டையே இரண்டாக்கி விடுவார்கள்.

இந்த பிரச்சனையை தீர்க்க நல்லதொரு தீர்வு கிடைத்தது. அதை explain செய்து எனது மகளையே விட்டு இந்த accessories organizer ஐ செய்ய சொன்னேன்.  அவளுக்கும் இந்த summer vacation பயனுள்ளதாக கழிந்தது. (எனக்கு இனிமே தேடி கொடுக்கற தொல்லை விட்டது ...😀)அதை எப்படி மிகக்குறைந்த செலவில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்வது என்பதை இந்த post-ல் பார்க்கலாம்.

Over to my Daughter: 

ஒவ்வொரு தடவையும் எடுத்து போடும் accessories ஸை மறுபடியும் எடுக்கும் படியான சரியான இடத்தில் வைப்பதே மிகவும் கடினம். இதுக்காக வீட்டில் waste ஆ இருக்கும் cardboard அட்டையை வைத்து நாம் உபயோகிக்கும் தோடு, necklace, செயின், hair-clip போன்றவற்றை எப்போதும் கலையாமல் அடுக்கி சரிபடுத்தி வைக்க நாம் ஒரு Organizer ஐ வீட்டிலேயே செய்யலாம்.

DIY Accessories Organizer செய்ய தேவையான பொருட்கள் :

1. Cardboard அட்டை
         இதை கடையில் வாங்க தேவையில்லை. நாம் online ல் amazon , flipkart போன்றவற்றில் பொருட்கள் வாங்கினால் அதை பேக் செய்து வரும் அட்டை பெட்டியே போதும்.

2. மெல்லிய கம்பி - 3m (Costs around Rs. 5/-)

3. Foam  Sheet ( Costs Rs. 10/- per sheet)

4. Scissor

5. cello டேப்பை

6. Fevibond

7. Wall hook (Costs around Rs. 5 to 10/-)

8. Tag / Thread to hang 

Total ஆ பார்த்தா வெறும் 50ரூபாயில் இந்த Accessories Organizer ஐ செய்து விடலாம்.

DIY Accessories Organizer ஐ எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.

வீட்டில் உள்ள பழைய cardboard box இல் இருந்து தேவையான அளவிற்கு கட் செய்து கொள்ளவும்.

வேறு சின்ன சின்ன அளவில் இருந்தால் கூட பரவாயில்லை அதை அனைத்தையும் ஒன்று சேர்த்து cello tape ஐ பயன்படுத்தி ஒட்டிக்கொள்ளவும். ஒரு Gift wrapper / Newspaper / Calendar பேப்பர் வைத்து fevicol பயன்படுத்தி முழுதாக கவர் செய்யவும்.  என்னிடம் உள்ள cardboard strong ஆக புதிய பொலிவுடன் இருந்ததால் நான் அதை வேறு பேப்பர் கொண்டு cover செய்யவில்லை.

பின் தேவைக்கேற்ப இரு பக்கங்களிலும் ஓட்டை போட்டுக்கொண்டு aluminium கம்பியை கீழ் உள்ள படத்தில் உள்ளது போல் ஓட்டையில் நுழைத்து tight ஆக அட்டையின் பின்புறம் முடுக்கி விடவும். இது உங்களிடம் உள்ள catcher clips மற்றும் center clips ஐ  மாட்ட உதவும்.



காதணிகளை வைக்க foam sheet ஐ பயன்படுத்தலாம். foam sheet ஐ சிறிய சிறிய செவ்வக வடிவ பட்டைகளாக (Rectangular Strips) வெட்டிக்கொள்ளவும்.  பின்னர் அதை ஒரு கார்டு போர்டு அட்டையில் வைத்து படத்தில் காட்டியுள்ளபடி stapler செய்து கொள்ளவும். Foam Sheet ல் தேவையான இடைவெளி விட்டு hole போட்டு கொள்ளவும். பின் காதணிகளை அதில் மாட்டி வைத்துக் கொள்ளலாம்.



இந்த அட்டைக்கு மேல் அவ்வட்டையினை தொங்க வைப்பதற்காக இரு ஓட்டைபோட்டு அதில் Tag ஐ மாட்டி தொங்க விடலாம். இந்த அட்டையை Wardrobe கதவின் உள்பக்கமாக Wallhook ஐ ஒட்டி இதை தொங்க விடலாம்.

என்னிடம் நிறைய செயின் மற்றும் மாலைகள் உள்ளதால் எங்கள் வீட்டில் உள்ள பழைய toiletries வைக்கும் tour bag ஐ  நான் பயன்படுத்துகிறேன்.



Toiletries bag இன் image மற்றும் link இங்கு:

https://www.amazon.in/HoneyDell-Cosmetic-Toiletry-Fold-able-Organizer/dp/B07QN61L72/ref=sr_1_51?qid=1559815663&s=beauty&sr=1-51

Hair band ஐ வைப்பதற்காக படத்தில் உள்ள படி அதே கம்பியை வளைத்து அட்டையுடன் ஒட்டவும்.



என்னிடம் நிறைய Accessories உள்ளதால் அட்டை weight தாங்காமல் போய்விடும் என்பதால்  காதணிகளை தனியாக அட்டையை தொங்கவிட்டுள்ளேன்.

வளையல்களை என்னிடம் ஏற்கனவே உள்ள வளையல் ஸ்டாண்டில் வைத்துள்ளேன்.

DIY Women's Accessories Organizer - Bangle Stand
Wooden Crafted Bangle Stand

Makeup சாமான்களான Brush, Lip Stick, Lip gloss, Eyeliner போன்றவற்றை ஒரு சிறிய பாக்கெட்டில் வைத்துள்ளேன்.

நமக்கு size  சிறியதாக போன பழைய Jeans Pant ன் பாக்கெட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்.  நான் என் தம்பியின் pant pocket ஐ cut செய்து விட்டேன் 😜. பாக்கெட்டை படத்தில் காட்டியுள்ளபடி வெட்டி எடுத்துக்கொண்டு அதனை Fevibond மற்றும் stapler இன் உதவியோடு அதே அட்டையில் ஒட்டிவிடுங்கள்.



Comments

Popular posts from this blog

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த எளிய வழி...

Chemical இல்லாமல் வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே clean செய்வது எப்படி ?

Trick to memorize 9th Table Easily...