கோபமாக உள்ள உங்க குழந்தையை கையாள சூப்பர் டிப்ஸ்!

இன்றைய நவீன கணிப்பொறி உலகில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினருக்கும் ஒரு பொதுவான வியாதி "கோபம்". அதில் குழந்தைகளுக்கு எளிதில் கோபம் வந்துவிடுகிறது. இதனை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி சமாளிப்பது? உங்க குழந்தையின் கோபத்தைக் கையாள சூப்பர் டிப்ஸ்! இன்றைய சூழலில் சிறிய வயது குழந்தைகூட, கோபம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தத்தொடங்கிவிட்டது. சாப்பிட, தூங்க, தனக்கு விருப்பமில்லாத விஷயத்தை பெற்றோர் புகுத்தும்போதோ, தன்னுடைய விருப்பம் நிறைவேறாமல் போனாலோ அல்லது தாமதமானாலும்கூட, படிக்க தன்னை வற்புறுத்துவதுபோல உணரும்போதோ, இக்கால குழந்தைகளுக்கு சட்டென கோபம் வந்துவிடுகிறது. அதிகமாக அழுது புரண்டு, கத்தி, சில சமயங்களில் கையில் உள்ள பொருட்களைப் போட்டு உடைத்தும் குழந்தைகள் தனது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இதை பெற்றோர் உடனே கவனிக்காமல் , ’குழந்தைதானே, செய்துவிட்டு போகட்டும்’ என்று விட்டுவிடக் கூடாது. அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இது கவனித்து மாற்றவேண்டிய ஒரு குணாதிசயம். ...