பெண்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அருமையான வழி !

கோலம் போடுவதன் தாத்பர்யம் மற்றும் மருத்துவ நன்மைகள் Click here to see more Rangolis... " கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் செய்யும் " என்பது பெரியோர் வாக்கு. ஆம். நம் வீடுகளில் அதிகாலை ப்ரஹ்ம முகூர்த்தத்தில் (4am - 6am) வாசல் தெளித்து கோலம் போட்டால் நம் இல்லங்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நம் வேதத்தில் சொல்லப்பட்ட உண்மை. எனவே தான் இன்றும் கிராமப்புரங்களில் பசுஞ்சாணம் கொண்டு வாசல் தெளித்து கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். பசுஞ்சாணம் ஓர் கிருமிநாசினியாக செயல்படுவதால் அந்த வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது. கோலங்கள் வெறும் அலங்கார நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள தீய மற்றும் எதிர்மறை தாக்கங்களை அழிப்பதற்கும் வரையப்படுகிறது. கோலங்கள் பல்வேறு சமூக, ஆன்மிக நுண் கருத்துக்களை உள்ளடக்க...