Posts

Showing posts with the label insects trap

கரப்பான் பூச்சிகளிடமிருந்து விடுதலை பெற இதப்படிங்க முதல்ல!

Image
வீட்டிலேயே குறைந்த செலவில் பூச்சிகளின் வரவை தடுக்க ஓர் மருந்து உருண்டை :  அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் ஜாலியாக நமது இல்லங்களில் உலாவந்து கொண்டிருக்கும் கரப்பான்களை நடமாட்டத்தை குறைப்பது எப்படி என்பதை பற்றிய பதிவே இது. இரவு நேரங்களில் கரப்பான், பாச்சை (சிறிய வகை கரப்பான்), பல்லி  போன்றவை  நம் வீடுகளின் சமையலறையிலும், வரவேற்பு அறைகளிலும் அழையா விருந்தாளியாக உள்ளே  வந்து விடுகின்றன. இதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகிறது. பல்வேறு கிருமிகள் பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பல உபாதைகள் ஏற்பட்டு நாம் உண்ணக்கூடிய உணவே விஷமாக மாறுகிறது.  இதன் மூலம் நேரடியாக பாதிக்கப்பட்டதால் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று முடிவெடுத்து அதில் வெற்றியும் பெற்றேன். அதை உங்களோடு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. Method 1: இந்த மருந்து உருண்டையை குறைந்த செலவி ல்  நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.  இதற்கு தேவையான பொருட்கள் : மைதா மாவு  - 3 tbsp போரி க்  பவுடர்  - 1 tbsp தண்ணீர் - தேவையான அள...