Posts

Showing posts with the label summer trip

உடல் அசதியைப் போக்க ஓர் மருந்து ரசம் தயார்!

Image
இந்த கோடை விடுமுறை நாட்களில் ஊரெல்லாம் சுற்றி  களைத்து போய் இருக்கிறீர்களா? உற்சாகமான உடலும், குதூகலமான மனமும் வாழ்க்கையை பிடிப்புடனும், நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்திட மிக முக்கியமானதாகும். இவற்றை சிதைக்கும் வகையில் அலுப்பும், சோர்வும் நம் உடல் மற்றும் மனதின் நோய்களாக இருக்கின்றன.  இந்த அலுப்பு மற்றும் சோர்வே இன்றைய அவசர உலகில் பலரையும் மனம் பிடிப்பில்லாமல் இறுக்கத்தோடு இயங்க வைக்கிறது. "என்னமோ தெரியல டாக்டர். காலையில் எழுந்திருக்கும்போதே உடம்பெல்லாம் குடையற மாதிரி இருக்கு... " என்று பெண்கள் பலர் புலம்பக் கேட்கலாம். அதே போல் அலுவலகம் முடித்து வரும் ஆண்களிடம் கடைக்குப் போகச் சொன்னால் "ஏண்டி! படுத்தற... நானே நொந்து நூடுல்ஸாகி வந்திருக்கேன். மனுஷனை வீட்ல நிம்மதியாவே இருக்க விட மாட்டியா?" என அலுத்துக்கொள்ளும் ஆண்களையும் பார்க்க முடிகிறது.  எப்படி இந்த சோர்வு மற்றும் அலுப்பிலிருந்து வெளிவருவது. இதோ உங்கள் உடல் அசதியைப்  போக்குவதற்கு ஒரு சுவையான ரசம் தயார்! இதை எங்கள் வீட்டில் மருந்து ரசம் என்போம். வாங்க பார்க்கலாம். இந்த மருந்து போ...