பட்டு புடவையை வீட்டிலேயே துவைத்து பராமரிப்பது எப்படி ??

விதவிதமான சேலைகள் பல இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் அது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து கொண்ட சேலைதான் பட்டு சேலை. புதியதாய் பட்டு புடவை வாங்கினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. உலகளவில் பல நாட்டு பெண்களும் அணிய விருப்பப்படும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும், அணியும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன. பட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஆலயத்திற்கு அணிந்து செல்லும் போது அங்கிருக்கும் இறை சக்தியை நம் உள்வாங்கி தருகிறதாம். அதன் காரணமாய் ஆலயம் செல்லும்போது அவசியம் பட்டு சேலை கட்டி வருகின்றனர். அதுபோல் பட்டு சேலைக்கு என தோஷமும் கிடையாது. பார்போற்றும் பட்டு சேலையை பாவையர் உடுத்தி செல்லும் போது உள்ளமெல்லாம் உற்சாகமாய் துள்ளும். அத்தகைய விலை உயர்ந்த பட்டு புடவையை பராமரிப்பது என்பது அனைவருக்கும் மிகப்பெரிய சவாலாக அமைகிறது. Dry Clean செய்ய கொடுத்தால் நமக்கு செலவு அதிகமாகும். அதிக விலை கொடுத்து வாங்கிய பட்டுப்புடவையை பராமரிப்பதற்கு ஆகும் செலவோ அப்பப்பா ! ...