கரப்பான் பூச்சிகளிடமிருந்து விடுதலை பெற இதப்படிங்க முதல்ல!

வீட்டிலேயே குறைந்த செலவில் பூச்சிகளின் வரவை தடுக்க ஓர் மருந்து உருண்டை : 


Image result for how to get rid of cockroaches forever

அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் ஜாலியாக நமது இல்லங்களில் உலாவந்து கொண்டிருக்கும் கரப்பான்களை நடமாட்டத்தை குறைப்பது எப்படி என்பதை பற்றிய பதிவே இது.

இரவு நேரங்களில் கரப்பான், பாச்சை (சிறிய வகை கரப்பான்), பல்லி  போன்றவை  நம் வீடுகளின் சமையலறையிலும், வரவேற்பு அறைகளிலும் அழையா விருந்தாளியாக உள்ளே  வந்து விடுகின்றன.

இதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகிறது. பல்வேறு கிருமிகள் பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பல உபாதைகள் ஏற்பட்டு நாம் உண்ணக்கூடிய உணவே விஷமாக மாறுகிறது. 

இதன் மூலம் நேரடியாக பாதிக்கப்பட்டதால் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று முடிவெடுத்து அதில் வெற்றியும் பெற்றேன். அதை உங்களோடு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.

Method 1:



இந்த மருந்து உருண்டையை குறைந்த செலவில் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.  இதற்கு தேவையான பொருட்கள் :

மைதா மாவு  - 3 tbsp
போரிக் பவுடர்  - 1 tbsp
தண்ணீர் - தேவையான அளவு.


போரிக் பவுடர் என்பது நாம் Carrom Board க்கு பயன்படுத்தும் பவுடர் ஆகும். மைதா மாவையும், போரிங் பவுடரையும் 3:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவேண்டும். 

பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காயவைக்க வேண்டும். அவ்வாறு காய வைத்த உருண்டைகளை  அதிகமாக பூச்சிகள் நடமாடும் சமையலறை மேடை, பாத்திரம் கழுவும் sink, சமையலறை பொருட்கள் வைக்கும் அலமாரி, வரவேற்பறை ஆகிய இடங்களில் போட்டு விட்டால் 2/3 மாதங்களுக்கு அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம். 

அந்த உருண்டையின் வீரியம் குறைந்தவுடன் வேறு புது உருண்டைகளை போடலாம். 

இதை நானே எனது வீட்டில் செய்து மிகுந்த பயனடைந்துள்ளேன். 
நீங்களும் try பண்ணி பாருங்க.. பூச்சிகளிடமிருந்து விடுதலை பெறுங்கள் ...

எச்சரிக்கை : குழந்தைகள் எடுக்கும் இடங்களில் வைப்பதை தவிர்க்கவும். 

Keep Out of reach of Children ...

Method 2: 

Cockroach Trap - கரப்பான் பொறி 

மிகவும் எளிய முறையில் ஒரே இரவில் சமையலறையில் உள்ள கரப்பான் பூச்சிகளை பிடிக்க பொறி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Cockroach entering thro Sink



தேவையான பொருட்கள்:

Use and Throw water bottle (பயனற்ற பிளாஸ்டிக் பாட்டில்) - 1
Vasaelin Cream (வாசலின் கிரீம்)- 1 small bottle
Any Sweet (மைசூர்பாக், லட்டு) - 1
Water (தண்ணீர்) - சிறிதளவு




பிளாஸ்டிக் பாட்டலின் மேல் பகுதியை(கழுத்து பகுதி) வெட்டி எடுத்து விடவும்.
மீதமுள்ள வாயகன்ற பாட்டிலின் உள்புறம் முழுவதும் வாசலின் கிரீமை நன்கு தடவி விடவும்.   பின்னர் ஏதோவொரு ஸ்வீட்டை நன்கு தூளாக்கி அந்த பாட்டிலின் உள்ளே போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கரைய விடவும். 

பின்னர் அந்த பாட்டிலை அதிகமாக கரப்பான்கள் நடமாடும் பகுதியில்(சமையலறை Sink அருகில்) ஓர் இரவு முழுவதும் வைத்து விடவேண்டும். மறு நாள் காலை அந்த பாட்டிலை ஆராய்ந்து பார்த்தால் அதில் கரப்பான்கள் உள்ளே மாட்டிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவிப்பதைக்  காணலாம். பாட்டிலில் உள்ள இனிப்பு வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் பாட்டிலுக்குள் வந்து விடும். Vaselin கிரீம் தடவி இருப்பதால் அதனால் வெளியே வரமுடியாமல் வழுக்கி வழுக்கி உள்ளேயே விழுந்து விடும்.

அந்த பாட்டிலை மூடி நாம் குப்பையில் தூர போட்டு விடலாம்.

அப்பாடா! ஒரு வழியா கரப்பான் பூச்சிகளை விரட்ட வழி கிடைத்து விட்டது.


இனி பூச்சிகள் தொந்தரவில் இருந்து விடுதலை பெற்று, 
நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ....

Comments

Popular posts from this blog

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த எளிய வழி...

Chemical இல்லாமல் வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே clean செய்வது எப்படி ?

Trick to memorize 9th Table Easily...