எலிகளை🐀நமது காருக்குள் 🚗 வராமல் தடுக்க
கார் வைத்திருப்பவர்கள் அதனை service செய்யும் செலவினை கூட சமாளிக்கலாம். ஆனால் எலி புகுந்து விட்டால் அதனை யாராலும் சமாளிக்க முடியாது. சில சமயங்களில் கோபமே வராத ஆட்களுக்கு கூட இதைப் பார்த்தவுடன் கோபம் வந்து விடும். சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் இடமின்மை காரணமாக தங்களது வாகனங்களை வீட்டு வாசலிலோ அல்லது தெரு ஓரங்களிலோ நிறுத்த வேண்டிய கட்டாயமாகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி எலிகள் காருக்குள் புகுந்து தனது சேட்டையை தொடங்கி விடுகிறது.
காருக்குள் நுழைவது மட்டுமல்லாமல் காரிலிலுள்ள wire களை கடிப்பதனால் electric circuit ல் மிக பெரிய பிரச்சனை வருகிறது. electric circuit ல் பிரச்சனை ஏற்பட்டால் கார் ஓடும் சமயத்தில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.
சில சமயங்களில் காருக்குள் சென்ற எலிகள் வெளியே வர வழி தெரியாமல் உள்ளேயே இறந்து விடுவதால் காருக்குள் துர்நாற்றம் வீசுகிறது.
எதனால் எலிகள் காரைத் தேடி வருகிறது?
- புதிய கார்களில் ரப்பர் ஷீட் மற்றும் பிளாஸ்டிக் உபகரணங்களை ஓட்ட பயன்படுத்தப்படும் gum-ன் வாசனை எலிகளுக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே எலிகள் நம் காரைத்தேடி வரலாம்.
- குளிர்காலங்களில் என்ஜினின் சூடு எலிகளுக்கு கதகதப்பாக இருப்பதாலும் அது வரலாம்.
- வெயில் காலங்களில் ஜிலு ஜிலுவென்ற A /C காற்று வாங்க உள்ளே வரலாம்.
இப்படி நாம் அனுபவிக்க, பல லட்சங்களை போட்டு சொகுசு காரை வாங்கி நம் வீட்டில் நிறுத்தி வைத்தால், எலிகள் அதன் சொகுசு வாழ்க்கையை நம் காரில் வாழ்ந்து நம் நிம்மதியை கெடுக்கிறது.
இவ்வாறு நமக்கு பல துன்பங்களை கொடுத்து நம் நிம்மதியை கெடுக்கும் எலிகளை உள்ளே வர விடாமல் விரட்டுவது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதன் விளைவு தான் இந்த பதிவு. இதை உங்களுடன் பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் "Sharing Knowledge Costs Nothing". நம் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தும் அல்லது கடையில் கிடைக்கும் எலி விரட்டிகளை பயன்படுத்தியும் நம் எலி எதிரிகளை சமாளிக்கலாம். 👍
வீட்டிலுள்ள எலி விரட்டும் பொருட்கள்:
1. நாட்டு புகையிலை: கடைகளில் கிடைக்கக்கூடிய நாட்டு புகையிலையினை வாங்கி Bonnet Area வில் ஆங்காங்கே கட்டி வைக்கலாம். இந்த வாடை எலிகளுக்கு சுத்தமாக பிடிக்காததால் கண்டிப்பாக எலிகள் நம் கார் பக்கமே வராது. புகையிலை கிடைக்கவில்லை என்றால் சுருட்டினை கூட பயன்படுத்தலாம். ஒருமுறை engine ல் கட்டினால் 5 முதல் 6 வாரம் வரை எலிகள் வராமல் இருக்கும். அதன்பின் சிறிது சிறிதாக இதன் வீரியம் குறையத்தொடங்கும்.
2. நாப்தலின் உருண்டை : நம் ஆடைகளை அடுக்கி வைக்கும் பீரோவில் பூச்சிகளும், கரப்புகளும் வராமல் தடுக்க நாப்தலின் உருண்டைகளை போடுவோம் அல்லவா! அதையே Bonnet Area வில் ஆங்காங்கே போட்டு வைத்தால் கூட எலிகள் வராது. எலிகளுக்கு நாப்தலின் வாடையும் பிடிக்காதாம்.
3. புதினா, எருக்கஞ்செடி போன்றவை எலிகளுக்கு பிடிக்காதவை. ஆதலால் உங்கள் Parking area வில் இந்த செடிகளை வளர்த்தால் எலிகள் கார் பக்கமே வராது. அனால் இதனை அனைவராலும் பின்பற்ற முடியாது.
4. மூக்குப்பொடியை Bonnet Area வில் ஆங்காங்கே தூவிவிட்டால் அதன் வாடை எலியை காருக்குள் அண்டவிடாது. ஆனால் நகர்புறத்தில் உள்ளவர்கள் இதனை தேடி வாங்குவது கடினம்.
5. உங்க Parking ஐ பினாயில் ஊற்றி கழுவினால் மட்டுமே போதும் . இதன் வாடை எலிகளுக்கு பிடிக்காததால் எலிகள் உங்கள் காரை நெருங்காது.
6. மிளகு : எலிகளுக்கு பிடிக்காத ஒரே வாசனை "மிளகு வாசனை". அதனால் மிளகுபொடியை காரின் bonnet area வில் தூவுவதால், எலி காருக்குள் வராது. ஆனால் சிறிது தூரம் கார் ஓடியபின் engine சூட்டினால் மிளகுடைய வாசனை
காருக்குள் வந்து நமக்கு தும்மலை உண்டு பண்ணும்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் :
கார்களில் எலிகள் வர விடாமல் தடுக்க கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களைப் பற்றி பார்க்கலாமா!
1. எலி வலைகள்
எலிகள் காருக்குள் வருவதை தடுக்க வலைகள் (Steel Mesh) கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி காரில் ஓட்டினால் எலி உள்ளே வரும் பாதை அடைபட்டு விடும். காரை சர்வீஸ் விடும்போது இதை பிரித்து எடுத்து விட்டு மறுபடியும் ஒட்டிக்கொள்ளலாம்.
எலிகளை விரட்டும் spray கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கி என்ஜின் ஏரியாவில் அடித்து விட்டால் எலிகள் காருக்கு அருகில் வராது.
3. Ultrasonic Sound Machine
கொசுவுக்கு பிடிக்காத ஒலி எழுப்பக்கூடிய அல்ட்ராசோனிக் சவுண்ட் producing மெஷின் மாதிரியே, எலிகளுக்கும் உள்ளது. இதை வாங்கி காருக்கு அருகில் இரவு நேரங்களில் இயங்க செய்தால் எலி பயந்து ஓடி விடும். கார் பக்கமே வராது.
எங்க கிளம்பிட்டீங்க .... எலியை விரட்டவா....
மேற்கண்ட ஏதோ ஒரு வழியால்,
🐀எலியை விரட்டிடுவோம்!!! நிம்மதியாக வாழ்வோம் !!! 😊
இதில் எதுவுமே எனக்கு உதவ வில்லை
ReplyDeleteவேறு என்ன செய்வது
காரை விற்றுவிடவும்
ReplyDelete