பெண்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அருமையான வழி !
கோலம் போடுவதன் தாத்பர்யம் மற்றும் மருத்துவ நன்மைகள்
|
"கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் செய்யும்" என்பது பெரியோர் வாக்கு. ஆம். நம் வீடுகளில் அதிகாலை ப்ரஹ்ம முகூர்த்தத்தில் (4am - 6am) வாசல் தெளித்து கோலம் போட்டால் நம் இல்லங்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நம் வேதத்தில் சொல்லப்பட்ட உண்மை. எனவே தான் இன்றும் கிராமப்புரங்களில் பசுஞ்சாணம் கொண்டு வாசல் தெளித்து கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். பசுஞ்சாணம் ஓர் கிருமிநாசினியாக செயல்படுவதால் அந்த வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது. கோலங்கள் வெறும் அலங்கார நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள தீய மற்றும் எதிர்மறை தாக்கங்களை அழிப்பதற்கும் வரையப்படுகிறது. கோலங்கள் பல்வேறு சமூக, ஆன்மிக நுண் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் அமுது படைக்காமல், தினமும் நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களுக்கும் உணவிடுவதற்காகவே இல்லத்தரசி அரிசி மாவினால் கோலம் இடுகிறாள். "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" நம் பண்பாடன்றோ!
நமது சாஸ்திரம் சொல்வது என்ன?
நமது பெரியோர்கள் கோலமிடுவதற்கு சில சாஸ்திரங்களை வகுத்துள்ளனர். அதை அடுத்த தலைமுறையினரிடம் சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு இக்கால பெண்களுக்கு உள்ளது.
✔ கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும்.
✔ வேலைக்காரர்களை வைத்து போடக்கூடாது.
✔ கோலத்திற்கு காவியும் தீட்டினால் "அங்கு பகவானும், லட்சுமியும்" எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.
✔ சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது.
✔ அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும்.
✔ அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது. முடிந்தவரை உப்பு, மணல் ஆகியவற்றை கொண்டு கோலமிடுவதை தவிர்க்கவும்.
கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் :
மிக முக்கிய நன்மை என்று சொன்னால் நமது பெண்களின் படைப்பாற்றல் மேம்பட இது பெரிதும் உதவுகிறது. எனவே அவர்கள் தங்களின் அனைத்து வேலைகளையும் செவ்வனே செய்ய முடிகிறது.
அது மட்டுமின்றி பல மருத்துவ முக்கியத்துவமும் கோலம் இடுதலில் அடங்கியுள்ளது.
1. யோசிக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்க - Improves thinking ability & Memory Power
🎆பெண்கள் கோலம் போடுவதற்கு முன் என்ன அன்றைய தினம் என்ன கோலம் போடலாம் என்று யோசித்து, எதை வடிவமைத்தால் அன்றைய தினம் அந்த வீடு அழகாக காட்சியளிக்கும் என்று யோசித்து அந்த கோலத்தை இடுகின்றனர். புள்ளி கோலம், சிக்குக்கோலம், மனைக்கோலம், ரங்கோலி போன்ற பல வகைக்கோலங்களில் தினமும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை செவ்வனே வரைகின்றனர்.
🎆இதனால் அவர்களின் யோசிக்கும் திறன் அதிகரித்து, கற்பனை வளம் பெருகுகிறது. ஞாபகசக்கி மேன்மையடைகிறது.
2. சிறந்த யோகா பயிற்சி
🌠பெண்கள் தினமும் குனிந்து நிமிர்ந்து பெருக்கி, மெழுகி கோலமிடுவதால் அவர்களின் இடுப்பு பகுதி பலப்படுகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
🌠அதிகாலை எழுவதால் சுத்தமான காற்றை சுவாசித்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வழி வகுக்கிறது.
🌠அவர்களின் கை விரல்களுக்கும் சிறந்த பயிற்சி அளிக்கிறது. இவை அனைத்தும் யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலை அளிக்கக்கூடியதாகும்.
3. தீர்வு காணும் மதி நுட்பம்
✨பல்வேறு புள்ளிகளை இணைத்து கோலம் போடுவதால், நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அறிவு வளர்கிறது. இதைத்தான் Problem Solving Techniques என்கின்றனரோ அறிஞர்கள்!
✨ ஆகவே தான் இன்றும் பல குடும்பங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வீட்டு பெண்களிடம் ஆலோசனை கேட்பதுண்டு. "ஆராய்ந்து காண்பதே அறிவு" அல்லவா !
எனவே நாமும் தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு
மகாலட்சுமியை வரவேற்பதோடு,
ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம் !!!
Comments
Post a Comment