Chemical இல்லாமல் வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே clean செய்வது எப்படி ?
நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்படுத்தப்படுவது வெள்ளிதான். அரைஞாண் கயிறு, கொலுசு, மெட்டி என குழந்தை பிறந்ததிலிருந்து ஒட்டி உறவாடும் இந்த வெள்ளி நகைகளை எப்படி பராமரிப்பது..? தங்கத்திலிருக்கும் ‘ஹால்மார்க்’ மாதிரியான முழு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் பொதுவான முத்திரைகள், வெள்ளி நகைகளுக்கு இல்லை. ஆகையால், அவற்றை நம்பிக்கையான கடைகளில் வாங்குவது நல்லது. வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் நகைகளை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் அவை கறுப்பாக மாறி விடுகின்றன. அதற்காக வெள்ளியின் தரத்தில் குறை இருப்பதாக எண்ண வேண்டாம். ஒவ்வொரு முறை வெள்ளி பாத்திரங்களை உபயோகித்த பின் காற்று படுவதால் கருத்துவிடுகிறது. கடைகளில் ஒவ்வொரு முறை polish க்கு கொடுத்தாலும் அதன் எடை குறைந்து விடுகிறது. அதனால் வீட்டிலேயே எவ்வாறு பள பளவென வெள்ளி பாத்திரங்கள் மின்னும் படியாக சுத்தம் செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பட்டு புடவையை பராமரிக்க உபயோகித்த பூந்தி கொட்டையை பயன்படுத்தி எளிதில் வெள்ளி பாத்திரங்களை சுத...