DIY Organizer for Women's accessories using Cardboard

ஒவ்வொரு முறை நாம் வெளியூர்களுக்கு போகும் போதும், கடைகளுக்கு shopping செய்ய போகும் போதும் ஏதாவது Bangles , Hairclips, Chain, Necklace போன்ற பெண் குழந்தைகளுக்கான accessories புது டிசைனில் இருந்தால் உடனே வாங்கி விடுவோம். நம் வீட்டு ராஜகுமாரிகள் 👸 தினமும் அதை டிரஸ்க்கு matching காக போட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக வலம் வருவார்கள். புதிதாக ஒரு தோடு போட்டுக்கொண்டால் கூட அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆனால் குழந்தைகள் அதை மறுபடியும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. வீடு முழுவதும் இரைந்து கிடக்கும். அம்மாக்களுக்கு தான் வேலை. பிறகு என்றாவது ஒரு நாள் வெளியில் செல்ல நேரும் போது "😠அம்மா! என் ஒரு தோடு இங்க இருக்கு. இனொன்னு எங்க? எனக்கு தேடிக்கொடு"😕என்று வீட்டையே இரண்டாக்கி விடுவார்கள். இந்த பிரச்சனையை தீர்க்க நல்லதொரு தீர்வு கிடைத்தது. அதை explain செய்து எனது மகளையே விட்டு இந்த accessories organizer ஐ செய்ய சொன்னேன். அவளுக்கும் இந்த summer vacation பயனுள்ளதாக கழிந்தது. (எனக்கு இனிமே தேடி கொடுக்கற தொல்லை விட்டது ...😀)அதை எப்படி மிகக்குறைந்த செலவில் வீட்...